'சீதா ராமம்' அனைவரும் பார்க்க வேண்டிய படம் - வெங்கையா நாயுடு பாராட்டு

'சீதா ராமம்' அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.
'சீதா ராமம்' அனைவரும் பார்க்க வேண்டிய படம் - வெங்கையா நாயுடு பாராட்டு
Published on

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவான இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் 'சீதா ராமம்' அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சீதாராம்" படம் பார்த்தேன். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் ஒருங்கிணைப்பில், ஒரு அழகான காட்சி உருவாகியுள்ளது. எளிமையான காதல் கதையைப் போலல்லாமல், வீரம் நிறைந்த சிப்பாய் பின்னணியுடன், பலவிதமான உணர்வுகளை வெளிக்கொணரும் இந்தப் படம், அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வைத் தந்தது 'சீதா ராமம்'. போர் ஓசையின்றி கண்களுக்கு இதமான இயற்கையின் அழகைக் காட்டிய இயக்குநர் ஹனு ராகவபுடி, தயாரிப்பாளர் அஷ்வினிதத், ஸ்வப்னா மூவி மேக்கர்ஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று தெலுங்கில் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com