செல்வராகவனின் "7ஜி ரெயின்போ காலனி 2" படப்பிடிப்பு அப்டேட்

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
செல்வராகவனின் "7ஜி ரெயின்போ காலனி 2" படப்பிடிப்பு அப்டேட்
Published on

சென்னை,

இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்குபவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற 'கண்பேசும் வார்த்தைகள்' , 'கனா காணும் காலங்கள்' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன.

19 ஆண்டுகளுக்கு பிறகு '7ஜி ரெயின்போ காலனி' 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் நடைபெற்று வருகிறது.. முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே 2-ம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா 2-ம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார்.

புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியானது. 19 ஆண்டுகளுக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2-ம் பாகம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தினை ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். ராம்ஜி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே சத்தமே இல்லாமல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்னும் இரண்டு வார படப்பிடிப்புகள் மட்டுமே மீதம் இருப்பதாகவும் விரைவில் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின்பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com