"7ஜி ரெயின்போ காலனி 2" குறித்து செல்வராகவன் வெளியிட்ட அப்டேட்

‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.
"7ஜி ரெயின்போ காலனி 2" குறித்து செல்வராகவன் வெளியிட்ட அப்டேட்
Published on

சென்னை,

இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்குபவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற 'கண்பேசும் வார்த்தைகள்' , 'கனா காணும் காலங்கள்' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. 19 ஆண்டுகளுக்கு பிறகு '7ஜி ரெயின்போ காலனி' 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் நடைபெற்று வருகிறது.. முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே 2-ம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா 2-ம் பாகத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.

புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2-ம் பாகம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தினை ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். ராம்ஜி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே சத்தமே இல்லாமல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின்பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் குறித்து சில தகவல்களை செல்வராகவன் சமீபத்தில் நடந்த பேட்டியில் பகிர்ந்து உள்ளார். அதன்படி, "7ஜி ரெயின்போ காலனி படத்தின் படப்பிடிப்பு 50% முடிவடைந்துவிட்டது. 10 வருடங்களுக்குப் பிறகு அதே கதிரின் கதையை எடுக்கிறேன். முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான க்ளூ இருக்கும். பெரிய படங்களுக்கு நடுவில் இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com