பாக்ஸ் ஆபீஸில் புயலை கிளப்பும் ''சயாரா''...ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து அசத்தல்

அறிமுக நடிகர் அஹான் பாண்டே , நடிகை அனீத் பத்தா நடித்த 'சயாரா' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் புயலை கிளப்பி இருக்கிறது.
சென்னை,
இயக்குனர் மோஹித் சூரி இயக்கத்தில், அறிமுக நடிகர் அஹான் பாண்டே , நடிகை அனீத் பத்தா நடித்த 'சயாரா' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் புயலை கிளப்பி இருக்கிறது.
சிறிய நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் கடந்த 18-ம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், முதல் நாளில் ரூ. 21.25 கோடி என்ற மிகப்பெரிய வசூலை ஈட்டியது.
இதன் மூலம், கொரோனா காலத்திற்கு பிறகு யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகி பெரிய ஓபனிங் கொடுத்த 3-வது படமாக 'சயாரா' சாதனை படைத்தது. பதான் ரூ. 55 கோடி மற்றும் டைகர் 3 ரூ. 43 கோடி வசூலித்தது.
இந்நிலையில், பாக்ஸ் ஆபீஸில் வேகம் குறையாத ''சயாரா'' ரூ. 100 கோடி கிளப்பில் சேர்ந்திருக்கிறது. உலகளவில் இப்படம் ரூ.116 கோடி வசூலித்திருக்கிறது.
Related Tags :
Next Story






