தற்கொலைக்கு முயன்றதாக பரவிய தகவல் - சின்னத்திரை நடிகை அமுதா விளக்கம்


Serial actress Amutha explains the news that she attempted suicide
x
தினத்தந்தி 2 May 2025 8:16 AM IST (Updated: 2 May 2025 9:02 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா

சென்னை,

சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது 'கயல்' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அமுதா கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரை தோழி ஒருவர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த அமுதா இந்த விபரீத முடிவெடுத்ததாக கூறப்பட்டது. இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில், தற்கொலைக்கு முயன்றதாக பரவிய தகவல் குறித்து நடிகை அமுதா விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி, தான் தனது கிராமத்தில் இருப்பதாகவும் தற்கொலை குறித்து பரவி வரும் தகவலை வதந்தி எனவும், அதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அமுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 More update

Next Story