ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பெண்களை ஆபாசமாக சித்தரிப்போருக்கு கடும் தண்டனை - குஷ்பு ஆவேசம்

இதுபோன்ற பேர்வழிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்", என்று நடிகை குஷ்பு குறிப்பிட்டார்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பெண்களை ஆபாசமாக சித்தரிப்போருக்கு கடும் தண்டனை - குஷ்பு ஆவேசம்
Published on: 

சென்னை,

ஒரு பெண்ணை ஆபாசமாக சித்தரிக்கும் முன்பாக, தங்களது குடும்பத்தில் உள்ள பெண்களை வைத்து அத்தகைய காணொளிகளை உருவாக்கிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் பாதிப்பை உணரமுடியும். என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

குஷ்பு தலைமையில் கூட்டம்

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. சங்கத்தின் தலைவர் குஷ்பு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் குட்டி பத்மினி, பாலேஷ்வர், அழகன் தமிழ்மணி, ஒய்.ஜி.மகேந்திரன், சுஜாதா உள்பட பலர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதுகுறித்து குஷ்பு கூறும்போது, "திரைக்குப் பின்னால் இருந்து பணியாற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பலருக்கும் தெரிவதில்லை. சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்டும் நோக்கில், அடுத்த ஆண்டு (2027) ஏப்ரல் மாதம் மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். தயாரிப்பாளர்கள் சார்பில் பல கோரிக்கைகளை அரசுக்கு விடுத்திருக்கிறோம். நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு தொழில்நுட்பத்திற்கும் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் இருக்கிறது.

கடும் தண்டனை வழங்க வேண்டும்

ஆனால் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. ஒரு பெண்ணை ஆபாசமாக சித்தரிக்கும் முன்பாக, தங்களது குடும்பத்தில் உள்ள பெண்களை வைத்து அத்தகைய காணொளிகளை உருவாக்கிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் பாதிப்பை உணரமுடியும். இதுபோன்ற பேர்வழிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்", என்று குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com