கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் திருமணம்

கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்துக்கு திருமணம் முடிவாகி உள்ளது.
கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் திருமணம்
Published on

தமிழில் என் சகியே, முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் ராக்கி சாவந்த். இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீதத்தாவுடன் மோதினார். ஒருவருக்கொருவர் நோட்டீசும் அனுப்பினர். சமீபத்தில் சண்டிகரில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் பெண் வீராங்கனையை வம்புக்கு இழுத்து அவரிடம் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 40 வயதாகும் ராக்கி சாவந்துக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இந்தி டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தீபக் கலால் (வயது 45) என்பவரை மணக்கிறார். திருமண அழைப்பிதழை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவர் கூறியதாவது:-

நானும், தீபக்கும் டி.வி நிகழ்ச்சிகளில் சந்தித்து பழகினோம். என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தீபக் கூறினார். நானும் சம்மதம் சொன்னேன். எனது திருமணத்துக்கு இதுதான் சரியான நேரம் என்று கருதுகிறேன். எங்கள் இருவீட்டு குடும்பத்தினருடன் பேசி திருமணத்தை முடிவு செய்தோம். எங்கள் திருமணம் டிசம்பர் 30-ந் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராக்கி சாவந்த் கடந்த 2009-ல் டி.வி சுயம்வரம் நிகழ்ச்சியில் 25 பேரில் எலிஸ் என்பவரை மணமகனாக தேர்வு செய்தார். நிச்சயதார்த்தமும் நடந்தது. பிறகு கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து விட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com