அலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை : நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக பரபரப்பு புகார் கூறியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
அலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை : நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்
Published on

நடிகை ஸ்ரீரெட்டி படவாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.

அவரது புகாரில் சிக்கிய நடிகர் லாரன்ஸ் நான் தவறு செய்யவில்லை என்று மறுத்ததுடன் ஸ்ரீரெட்டி நடிப்பு திறமையை நிரூபித்தால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். இந்த நிலையில் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்றும், சென்னையில் நிரந்தரமாக குடியேறப்போகிறேன் என்றும் அறிவித்த ஸ்ரீரெட்டி புதிய தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்கின்றனர். படத்துக்கு ரெட்டி டைரி என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார். சமூக சேவை பணிகளில் ஈடுபடப் போவதாகவும் பாலியல் தொல்லைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்போவதாகவும் ஸ்ரீரெட்டி அறிவித்து உள்ளார்.

செக்ஸ் தொல்லைகளை சந்திக்கும் பெண்கள் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கூறினார். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண், அலுவலக மேலாளர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று ஸ்ரீரெட்டிக்கு தகவல் அனுப்பினார். அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீரெட்டி, பாலியல் தொல்லை கொடுத்த அந்த மேலாளருக்கு சென்னை பெண்கள் செருப்படி கொடுக்க வேண்டும் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com