வில்லன் நடிகர் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகைக்கு மிரட்டல்

பாலியல் புகாரை வாபஸ் வாங்கும் படி நடிகைக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
வில்லன் நடிகர் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகைக்கு மிரட்டல்
Published on

பிரபல மலையாள வில்லன் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது இளம் நடிகை போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்பாபு நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்து மயக்க மருந்து கொடுத்து பல தடவை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்படலாம் என்று பயந்து விஜய்பாபு துபாய் தப்பி சென்று விட்டார்.

நேரில் ஆஜராகுமாறு விஜய்பாபுவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் நேரில் ஆஜராக முடியாது என்றும் 19-ந்தேதிவரை அவகாசம் வேண்டும் என்றும் விஜய்பாபு போலீசுக்கு மெயில் அனுப்பி உள்ளார். இதனை ஏற்காத போலீசார் சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள சிலர் தங்கள் கருப்பு பணத்தை விஜய்பாபு மூலம் சினிமாவில் முதலீடு செய்துள்ளனரா என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இந்த நிலையில் பாலியல் புகாரை வாபஸ் பெறும்படி நடிகைக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரிக்கப்படுவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com