சினிமாவில் எனக்கும் பாலியல் தொல்லைகள் -நடிகை சோனா

சினிமாவில் எனக்கும் பாலியல் தொல்லைகள் -நடிகை சோனா.
சினிமாவில் எனக்கும் பாலியல் தொல்லைகள் -நடிகை சோனா
Published on

கவர்ச்சி, நகைச்சுவை, குணசித்திர நடிகையாக வலம் வந்த சோனா தற்போது தொலைக்காட்சி தொடரிலும் நடிக்க தொடங்கி உள்ளார். இதுகுறித்து சோனா அளித்துள்ள பேட்டியில் சினிமா தான் எனக்கு அடையாளம் தந்தது. நல்ல கதாபாத்திரம் அமைந்ததால் அபி டெய்லர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறேன்.

ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடித்ததால் இப்போதும் அதுமாதிரி நடிக்கவே வாய்ப்புகள் வருகின்றன. வில்லி, நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. தமிழில் மூன்று படங்களிலும், மலையாளத்தில் மூன்று படங்களிலும் நடிக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். பாலியல் தொல்லைகள் எல்லா துறையிலும் இருக்கிறது. இப்போது பள்ளியில் இருந்தும் இதுபோல் குற்றசாட்டுகள் வருகின்றன.

பாலியல் குற்றங்கள் எங்கு நடந்தாலும் முறையான விசாரணையும், தண்டனையும் அவசியம். திரைத்துறையை பொறுத்தவரை, தனித்து குற்றம் சொல்ல முடியாது. சில வருடங்களுக்கு முன் எனக்கும் இதுபோல் பாலியல் தொல்லை நடந்தது. நமக்கான உரிமைக்கு நாம்தான் போராட வேண்டும். உங்களுக்கு நடந்தால் அதை வெளிப்படுத்துங்கள். உரிமைக்கு குரல் கொடுங்கள். எதுவும் நடக்கவில்லையெனில் அதை கடந்து செல்லுங்கள். வாழ்க்கை பெரியது. எனக்கு நடந்ததை கடந்து வந்துவிட்டேன். அது தான் நல்லது'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com