மலையாள நடிகர்கள் திறமையானவர்கள் - நடிகை சமந்தா

மலையாளத்தில் உள்ள அனைத்து நடிகர்களுமே திறமையான மிகச்சிறந்த நடிகர்கள் என நடிகை சமந்தா சாகுந்தலம் படவிழா நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
மலையாள நடிகர்கள் திறமையானவர்கள் - நடிகை சமந்தா
Published on

நடிகை சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் திரைக்கு வர உள்ளது. துஷ்யந்தன், சகுந்தலையின் புராண கதையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. சமந்தா சகுந்தலையாக நடித்து இருக்கிறார்.

சாகுந்தலம் படவிழா நிகழ்ச்சி கொச்சியில் நடந்தது. இதில் சமந்தா கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது, "எனது தாய் ஆலப்புழாவை சேர்ந்தவர். அவர் எனக்கு மலையாளம் கற்றுத்தரவில்லை என்ற வருத்தம் இருந்தது. மலையாளத்தில் எனக்கு பிடித்த நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தால் மலையாளம் கற்றுக்கொண்டு எனது சொந்த குரலில் டப்பிங் பேசுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

தமிழ், தெலுங்கு நடிகர்களோடு மலையாள நடிகர்கள் எனக்கு பெரிய உத்வேகம் அளிக்கின்றனர். மலையாள படங்களை பார்த்து எனது நடிப்பை மேம்படுத்திக்கொள்கிறேன். மலையாளத்தில் உள்ள அனைத்து நடிகர்களுமே திறமையான மிகச்சிறந்த நடிகர்கள்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் பகத் பாசிலுடன் நடித்தபோது அவரது நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com