இளையராஜா இசையில் ஷாம் படம்

இளையராஜா இசையில் ஷாம் படம்
Published on

இளையராஜா இசையில் சிறுவர்களை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் சமீபத்தில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்த `இயற்கை' பட புகழ் ஷாம் கதாநாயகனாக நடிக்கிறார். ராதாரவி, சந்தான பாரதி, திருகுமரன், அஜய், ஆஷிகா யாஷ், ஈஸ்வரி, ஜாஸ்பர், மணிரத்னம், மானஸ்வி, விஸ்வநாதன் பிரபாகரன், ஷிவானி ஹரிகுமார், கமலேஷ், ஆர்வன் வெற்றி இளங்கோ, முகுந்தன், நிஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.பாரதி கணேஷ் டைரக்டு செய்கிறார். இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜயகாந்த், சிம்ரன் இணைந்து நடித்த `கண்ணுபட போகுதய்யா' படத்தை டைரக்டு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி எம்.ஆர்.பாரதி கூறும்போது, ``இன்றைய 5 ஜி ஜெனரேஷன் காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை, அறிவு, ஆற்றல், செயல்பாடுகள் மற்றும் இன்றைய சமூக சூழ்நிலைகள், வாழ்வியலின் பார்வை பற்றிய உணர்வுப்பூர்வமான விஷயங்களை விளக்கும் படமாக உருவாகிறது. சென்னை நகரில் நடக்கும் நல்ல கதையம்சத்துடன் தயாராகிறது'' என்றார்.

ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு. 5 இ கிரியேசன்ஸ் சார்பில் சுஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி மற்றும் சமீர் அமர்தீன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். படத்தின் தலைப்பை விரைவில் வெளியிட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com