காரோடு இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் குடும்பத்துக்கு ஷாருக்கான் நிதி உதவி

காரோடு இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் குடும்பத்துக்கு நடிகர் ஷாருக்கான் நிதி உதவி அளித்துள்ளார்.
காரோடு இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் குடும்பத்துக்கு ஷாருக்கான் நிதி உதவி
Published on

டெல்லியில் கடந்த வாரம் நாட்டையே உலுக்கிய சம்பவம் நடந்தது. அஞ்சலி சிங் என்ற இளம்பெண் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் காரும் மோதிக் கொண்டன. விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றது. இதில் அஞ்சலியின் ஒரு கால் காரில் சிக்கிக் கொள்ள அந்தப் பெண் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிர் இழந்தார். இந்த விபத்தை தொடர்ந்து டிரைவர் உள்பட காரில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மரணம் அடைந்த அஞ்சலி வருமானத்தை நம்பித்தான் அவரது குடும்பம் இருந்துள்ளது. இதை கேள்விப்பட்ட இந்தி நடிகர் ஷாருக்கான் உடனடியாக தனது அறக்கட்டளை மூலம் அஞ்சலி குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கி இருக்கிறார். அவர் எவ்வளவு பணம் கொடுத்தார் என்ற விவரம் வெளியாகவில்லை.

அஞ்சலி குடும்பத்துக்கு ஷாருக்கான் அளித்த நிதி அவர்கள் வாழ்க்கைக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஷாருக்கான் தனது அறக்கட்டளை மூலம் ஏழை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com