

பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடி வசூலை எட்டிய இந்தப் படத்தில் அனிருத்தின் இசையும் அதிகம் பேசப்பட்டது. 'சலேயா' உள்ளிட்டப் பாடல்களும் இணையத்தில் டிரெண்டானது. அதனுடன் இந்த படத்தின் பாடல்களுக்கு பல விருதுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டது. குறிப்பாக வட இந்திய ரசிகர்கள் இந்த படத்தின் இசை மற்றும் பிஜிஎம்ஐ சிறப்பாக கொண்டாடினர்.
இயக்குனர் சுஜாய் கோஷ் கைவண்ணத்தில் உருவாகவுள்ள படத்தில் ஷாருக்கான் மகள் சுஹான் கான் இணைந்துள்ளார். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் 'கிங்' என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஷாருக்கான் - அனிருத் கூட்டணி மறுபடியும் இணைகிறது. ஷாருக்கான் தயாரிப்பில் அவரது மகள் சுஹானா கான் சினிமாவுக்குள் அறிமுகமாகும் திரைப்பட்ம் 'கிங்'. இந்தப் படத்தின் தீம் மியூசிக் கம்போஸ் செய்ய அனிருத் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த விஷயம் அனிருத் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. 'கிங்' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. இயக்குநர் சுஜாய் கோஷ் படத்தின் பிரீ- புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறார்.
View this post on Instagram
இதுகுறித்து படக்குழுவினர் தெரிவித்ததாவது, "'கிங்' திரைப்படம் ஆக்ஷன் திரில்லர் கதைக்களமாக உருவாக இருக்கிறது. இசைக்கான முக்கியத்துவம் இதில் அதிகம் இருக்கும். இதை மனதில் கொண்டே, அனிருத்தை இந்தப் படத்திற்கு ஷாருக்கான் ஒப்பந்தம் செய்திருக்கிறார்" என்று கூறுகின்றனர்.
இந்தப் படத்தில் ஷாருக்கான் டானாக சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.