படப்பிடிப்பில் நடிகர் ஷாருக்கானுக்கு காயம்


Shah Rukh Khan sustains injury on King sets while filming action sequence
x

அக்டோபர் மாத‌த்திற்கு பின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.

மும்பை,

மும்பையில் நடைபெற்ற 'கிங்' படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

ஸ்டண்ட் செய்தபோது, ஷாருக்கானுக்கு தசை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கும்நிலையில், ஒருமாதம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து, 'கிங்' படத்தின் படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தப்படுவதாகவும், அக்டோபர் மாதத்திற்கு பின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்றும் படக்குழு தெரிவித்திருக்கிறது.

சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்தப் படம், ஆக்சன் திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

1 More update

Next Story