ரஜினிகாந்தை தேடி சென்று ஷாருக்கான் செய்த நெகிழ்ச்சி செயல்

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நேற்று நடைபெற்றது.
Shah Rukh Khan's brave act of searching for Rajinikanth
Published on

மும்பை,

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சி நாளை வரை மும்பையில் நடைபெற உள்ளது. இதனால், மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதில் உள்ளூர் திரை பிரபலம் முதல் உலக பிரபலம் வரை பலரும் பங்கேற்று வருகின்றனர்.

அதன்படி, நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக்கான், கிரிக்கெட் வீரர் டோனி, மல்யுத்த வீரர் ஜான் சீனா, ஹாலிவுட் நடிகர் நடிகைகள், அரசியல் கட்சியினர் உள்பட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷாருக்கான், நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் நாற்காலியில் அமர்ந்திருந்த ரஜினிகாந்தை, ஷாருக்கான் தேடி வந்து சந்தித்து வணக்கம் செலுத்துகிறார். இந்த நெகிழ்ச்சி செயல் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com