ரஜினியின் “ஜெயிலர் 2” படத்திலிருந்து ஷாருக்கான் விலகல்..?

‘ஜெயிலர் 2’ படத்தின் கேமியோ ரோலில் ஷாருக்கான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் “ஜெயிலர் 2” படத்திலிருந்து ஷாருக்கான் விலகல்..?
Published on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வர அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான் கேமியோவாக என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ‘கிங்’ படத்துக்கான கெட்டப்பில் ஷாருக்கான் உள்ளதால் அவர் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com