

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள ‘கிங்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இப்படம் ரூ. 350 கோடியில் உருவாகிவருகிறது.
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீண்டும் இணைந்துள்ள இப்படம், வரும் டிசம்பர் 24-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்படாது என்றும் ஷாருக்கான் ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கிங்’ படத்தின் முதல் பாடலான ‘து மில் ஜாயே’ பாடலை வெளியிட்டுள்ளனர்.
சச்சின் - ஜிகர் இசையில் அர்ஜித் சிங், எட் ஷெரின் பாடிய இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பாடல் காட்சிகளில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் காதலும் ரசனையாக எடுக்கப்பட்டுள்ளது.