மும்பையில் நடிகர் ஷாருக்கானின் பண்ணை இல்லத்திற்கு சீல் வைப்பு; வருமான வரி துறை நடவடிக்கை

மும்பையில் நடிகர் ஷாருக்கானின் பண்ணை இல்லத்தினை வருமான வரி துறையினர் சீல் வைத்துள்ளனர். #SRK
மும்பையில் நடிகர் ஷாருக்கானின் பண்ணை இல்லத்திற்கு சீல் வைப்பு; வருமான வரி துறை நடவடிக்கை
Published on

மும்பை,

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் அலிபாக் பகுதியில் இந்தி திரையுலகின் மெகா ஸ்டாராக இருக்கும் நடிகர் ஷாருக் கானின் பண்ணை இல்லம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், விவசாயம் செய்யும் நிலத்தில் அவர் பங்களா கட்டி உள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த டிசம்பரில், பினாமி சொத்து பரிமாற்றம் தடை சட்டத்தின்கீழ் வருமான வரி துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த பண்ணை இல்லத்தின் வட்டார மதிப்பு ரூ.14.67 கோடி அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், சந்தை மதிப்பு இதனை விட 5 மடங்கு கூடுதலாக இருக்கும் என வருமான வரி துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

விவசாயம் செய்வதற்காக இந்த நிலத்தினை வாங்க விண்ணப்பித்திருந்த அவர் அதற்கு பதிலாக தனது தனிப்பட்ட உபயோகத்திற்காக அதில் பண்ணை இல்லத்தினை கட்டியுள்ளார் என மிக பெரிய குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இது ஆடம்பர வடிவில் 19 ஆயிரத்து 960 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதில், நீச்சல் குளம் ஒன்று மற்றும் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் தளம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. பினாமி சொத்து என தெரிய வந்த நிலையில், பினாமி சட்டத்தின் அடிப்படையில் வருமான வரி துறையினர் அதனை முடக்கி சீல் வைத்துள்ளனர்.

#SRK #mumbai #Shahrukh #IT #Incometax

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com