ரூ.100 கோடி வசூலை குவித்துள்ள சைத்தான் திரைப்படம்

சைத்தான் திரைப்படம் வெளியான ஏழு நாட்களில் உலக முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரூ.100 கோடி வசூலை குவித்துள்ள சைத்தான் திரைப்படம்
Published on

மும்பை,

இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சைத்தான்'. இந்த படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். சூப்பர் நேச்சூரல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த 8ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.14.75 கோடி வசூலை குவித்தது. தொடர்ந்து இரண்டாவது நாளும் படத்தின் வசூல் மேலும் ஏற்றம் கண்டது. அதன்படி ரூ.18.75 கோடி வசூலை குவித்தது. இதையடுத்து, இப்படத்தின் மூன்றாவது நாளும் படத்தின் வசூல் தொடர்ந்து ஏற்றம் கண்டது. 3வது நாளில் இந்திய பாக்ஸ் ஆபீசில் ரூ.20.5 கோடி வசூலை குவித்தது.

இந்நிலையில், இப்படம் வெளியான ஏழு நாட்களில் உலக முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தி திரைப்பட பிரிவில் இந்த ஆண்டில் ரூ.100 கோடி வசூலை குவித்த 3வது திரைப்படம் இதுவாகும். மேலும் இந்த ஆண்டில் உலக முழுவதுக்குமான ரூ.100 கோடி வசூலித்த 7வது இந்திய திரைப்படம் இதுவாகும். சைத்தான் திரைப்படம் இந்தியாவில் சுமார் ரூ.80 கோடியும், வெளிநாடுகளில் ரூ.20 கோடியும் வசூலித்துள்ளது.

பாலிவுட்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், திரும்பிய நடிகை ஜோதிகாவிற்கு இப்படம் ரூ.100 கோடி வசூலை குவித்த முதல் திரைப்படம் மற்றும் மாதவனுக்கு இது 3வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com