திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை - பிரபல நடிகர்கள் கலக்கம்

ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகி உள்ளது.
திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை - பிரபல நடிகர்கள் கலக்கம்
Published on

தமிழ், மலையாளம், தெலுங்கு பட உலகில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. கேரளாவில் இவரது படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள் படங்களை முறியடித்த சம்பவங்களும் உண்டு. அரைகுறை உடையில் ஷகிலா தோன்றும் சுவரொட்டிகள் வீதியெங்கும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகி உள்ளது.

ஷகிலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்திரஜித் லங்கேஷ் இயக்கி உள்ளார். இந்த படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. ஷகிலாவை மலையாள படங்களில் நடிக்க விடாமல் தடுத்து கேரளாவில் இருந்து வெளியேற்றிய பின்னணியில் சில பிரபல நடிகர்கள் இருப்பதாகவும், அந்த நடிகர்கள் பற்றிய காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நடிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏற்கனவே மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி, கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா ஆகியோர் வாழ்க்கை கதை படங்களாக வந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com