பாடிக்கொண்டிருந்தபோதே மேடையில் விழுந்த பிரபல பாப் பாடகி...வைரலாகும் வீடியோ

கனடாவில் உள்ள மாண்ட்ரீலில் பிரபல பாப் பாடகி ஷகிராவின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
கனடா,
உற்சாகமாக பாடல் பாடிக்கொண்டிருந்த பிரபல பாப் பாடகி திடீரென மேடையில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கனடாவில் உள்ள கியூபெக்கின் மாண்ட்ரீலில் பிரபல பாப் பாடகி ஷகிராவின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை காண அங்கு ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
அப்போது தனது 'வென்னெவர் வாட்டெவர்' பாடலை உற்சாகமாக ஷகிரா பாடி கொண்டிருந்தார். அந்த பாடலை பாடிக்கொண்டே நடனமாடிய அவர் திடீரென மேடையில் விழுந்தார்.
இது அங்கிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருந்தபோதிலும், உடனடியாக அவர் அங்கிருந்து எழுந்து பாடலை தொடர்ந்து பாடினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவரின் மன உறுதியை பாராட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story






