“சக்தித் திருமகன்” படத்தின் “இந்தபடை போதுமா” பாடல் வெளியீடு

விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ திரைப்படம் நாளை வெளியாகிறது.
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தனது 25-வது படமான சக்தித் திருமகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அவரே தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு தெலுங்கில் 'பத்ரகாளி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் த்ரிப்தி கதாநாயகியாக நடித்துள்ளார். அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாக உள்ளது. சக்தித் திருமகன் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சக்தித் திருமகன் படத்தின் இந்தபடை போதுமா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com