“நான் நடித்த ஒரு படத்தை கூட என் பிள்ளைகள் முழுமையாக பார்த்ததில்லை’’ - நடிகை ஷாலினி

தன் பிள்ளைகள் இதுவரை தனது எந்த திரைப்படத்தையும் முழுமையாக பார்த்ததில்லை என்று ஷாலினி தெரிவித்தார்.
“நான் நடித்த ஒரு படத்தை கூட என் பிள்ளைகள் முழுமையாக பார்த்ததில்லை’’ - நடிகை ஷாலினி
Published on

சென்னை,

ஒருகாலத்தில் தனது இனிமையான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷாலினி, திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

அலைபாயுதே, அமர்க்களம், காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஷாலினி. சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தனது குடும்பத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார்.

Also Read
பிலிம் பேர் மேடையில் மின்னிய சாய் பல்லவி…7 விருதுகள் கைப்பற்றி சாதனை
“நான் நடித்த ஒரு படத்தை கூட என் பிள்ளைகள் முழுமையாக பார்த்ததில்லை’’ - நடிகை ஷாலினி

தன் பிள்ளைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இதுவரை தனது எந்த திரைப்படத்தையும் முழுமையாக பார்த்ததில்லை என்று தெரிவித்தார். “இந்த மேடையை ஒரு சிறிய கோரிக்கைக்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன். தயவு செய்து என் படங்களில் குறைந்தது ஒன்றையாவது முழுமையாக பாருங்கள்,” என்று கூறினார்.

மேலும், தனது மகள் அனோஷ்காசமீபத்தில் நண்பர்கள் மூலம் ‘அலைபாயுதே’ படம் குறித்து அறிந்து, தன்னுடன் சேர்ந்து பார்க்க விருப்பம் தெரிவித்ததாகவும் ஆனால் அது இதுவரை நடக்கவில்லை என்றும் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com