ஷேன் நிகாம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு

சாகர் உடகண்ட்லா இயக்கும் ‘ஷேன் 27’ திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார்.
ஷேன் நிகாம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு
Published on

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. ஷேன் நிகாம் ‘மெட்ராஸ்காரன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானார். ஷேன் நிகாம் தன் 25-வது படமான ‘பல்டி’யில் சாந்தனு பாக்கியராஜுடன் இணைந்து நடித்திருந்தார்.

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பான் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகரான ஷேன் நிகாம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

‘#ஷேன் 27’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை சாகர் உடகண்ட்லா இயக்குகிறார். துவாரகேஷ் மற்றும் அபூர்வன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மாதவ் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ்குமார் தயாரிக்கிறார்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com