ஷாங்காய் சர்வதேச படவிழாவில் சூர்யா படம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரை போற்று படம் கடந்த வருடம் வெளியாகி விமர்சனம், வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது.
ஷாங்காய் சர்வதேச படவிழாவில் சூர்யா படம்
Published on

இந்த படம் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றது. ஆனாலும் விருதுக்கு தேர்வாகவில்லை. பல சர்வதேச பட விழாக்களிலும் பங்கேற்று உள்ளது.

இந்த நிலையில் சூரரை போற்று படம் தற்போது சீனாவில் நடைபெறும் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவுக்கும் செல்கிறது. ஷாங்காய் திரைப்பட விழா அடுத்த மாதம் (ஜூன்) 11-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக அதிக கட்டுப்பாடுகளோடு விழாவை நடத்த உள்ளனர்.

இந்த விழாவில் சூரரை போற்று திரைப்படம் திரையிடப்பட உள்ளது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சூரரை போற்று படம் தயாராகி இருந்தது. இதில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஊர்வசி, கருணாஸ், பரேஷ் ராவல் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com