நடுரோட்டில் மனைவியுடன் குத்தாட்டம் போட்ட நடிகர் சாந்தனு... வைரல் வீடியோ!

நடிகர் சாந்தனுவும் அவரது மனைவி கிகியும் (கீர்த்தி) வெளிநாட்டில் சாலையில் ‘வாடி வாடி நாட்டுக்கட்ட...’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
நடுரோட்டில் மனைவியுடன் குத்தாட்டம் போட்ட நடிகர் சாந்தனு... வைரல் வீடியோ!
Published on

தமிழ் சினிமாவில் பன்முக திறமை வாய்ந்தவர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் கே.பாக்யராஜ். இவரின் மகனான சாந்தனு குழந்தை நட்சத்திரமாக பாக்யராஜ் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சக்கரக்கட்டி என்ற படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் தனக்கென தனியிடம் கிடைக்க போராடி வருகிறார். வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களாக இருந்தாலும் நீண்ட ஆண்டுகளாகவே வெற்றி என்ற ஒன்று கிடைக்காமல் இருந்தது. சக்கரக்கட்டி படத்தை தொடர்ந்து அவர் ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, மாஸ்டர், ராவணக்கோட்டம் என ஏராளமான படங்களில் நடித்திருந்தார்.

நடிகர் சாந்தனுவும் அவரது மனைவி, தொகுப்பாளினி கீர்த்தியும் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வதுண்டு. அப்படி தாய்லாந்திற்கு ஜோடியாக இருவரும் சென்ற போது அங்கு மக்கள் நடமாட்டம் இருக்கும் சாலையில் அள்ளி தந்த வானம் படத்தில் இடம்பெற்ற 'வாடி...வாடி நாட்டுக்கட்ட...' பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து, 'நாங்க எங்க விட்டாலும் ஆடுவோம்...' என சொல்லி உள்ளனர். இவர்களின் இந்த ஜாலி வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த 'ப்ளூ ஸ்டார்' படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதற்கடுத்து நல்ல படக் கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது மனைவி கிகி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, நடனம் என பிஸியாக இருக்கிறார்.

இந்த ஜோடி இணைந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறது. அதில் தங்களது செல்ல சண்டைகள், டிரிப் செல்லும் வீடியோ ஆகியவற்றைப் பகிர்ந்து வருகின்றனர். 

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com