முதல்-அமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சாந்தனு

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சாந்தனு
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகரான விஜய் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ரசிகர்கள் சிறப்பு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளை விஜயின் ரசிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சாந்தனு முதல் அமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மேலும் பல வெற்றிகளும், மகிழ்ச்சியான தருணங்களும், புன்னகைக்கப் பல காரணங்களும் அமைய வாழ்த்துகிறேன் . இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் அண்ணா.

மேடையில் நீங்கள் சொன்ன அந்த வார்த்தைகள் இன்றும் என் நினைவில் உள்ளன: "சாந்தனு, நீ எப்போதும் என் பிரார்த்தனைகளில் இருக்கிறாய்" நமது இந்த சகோதரத்துவ பிணைப்புக்கும், நாம் பகிர்ந்துகொண்ட தருணங்களுக்கும், இதிலுள்ள அனைத்துக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com