"படம் பார்த்த பிறகு உங்கள் கருத்துகளை பகிருங்கள்.. ஆனால்"- இயக்குனர் விக்னேஷ் ராஜா பேச்சு

பத்து நிமிடங்கள் பார்க்க தவறினால், படத்தில் பல விஷயங்கள் புரியாது என விக்னேஷ் ராஜா கூறியுள்ளார்.
"படம் பார்த்த பிறகு உங்கள் கருத்துகளை பகிருங்கள்.. ஆனால்"- இயக்குனர் விக்னேஷ் ராஜா பேச்சு
Published on

சென்னை,

‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், நேற்று இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். அதில் பேசிய இயக்குனர் விக்னேஷ் ராஜா f கர படம் பார்த்த பிறகு உங்கள் கருத்துகளை பகிருங்கள் என்றார். அதாவது, தனுஷ் சாருடன் பணிபுரிவது ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் படிப்பது போல இருந்தது. தனுஷ் சார் குழுவினர் ஒவ்வொன்றையும் மிகுந்த கவனத்துடன் செய்தனர்

படம் பார்த்த பிறகு உங்கள் கருத்துகளை பகிருங்கள். ஆனால், கதையையோ அல்லது இடைவேளை காட்சிகளையோ யாரும் வெளிப்படுத்த வேண்டாம்.

திரையரங்கிற்கு நேரத்திற்கு முன்பாகவே வந்து அமருங்கள். கதை முதல் காட்சியிலிருந்தே தொடங்குகிறது. முதல் ஐந்து நிமிடங்கள் தாமதமானால் சில விஷயங்கள் புரியாது, பத்து நிமிடங்கள் தாமதமானால் பல விஷயங்கள் புரியாது, என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com