'டான் 3' - கியாரா அத்வானி விலகல்...ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பிரபல நடிகை?


Sharvari to star opposite Ranveer Singh in Don 3 after Kiara Advanis exit
x

இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

பிரபல பாலிவுட் இயக்குனர் பர்ஹான் அக்தர். இவரது இயக்கத்தில் 'டான் 3' என்ற படம் உருவாகி வருகிறது. இதில் ரன்வீர் சிங் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், வில்லனாக 12-த் பெயில் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கர்ப்பமாக இருப்பதன் காரணமாக இப்படத்தில் இருந்து கியாரா விலகியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து அவருக்கு பதிலாக ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ஷர்வரி வாக் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஷர்வரி வாக் கடந்த ஆண்டு வெளியான 'முஞ்யா' படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது அவர் ஆலியா பட்டுடன் 'ஆல்பா' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 25-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

1 More update

Next Story