அனுபமா, ஷர்வானந்த், டிம்பிள் ஹயாதி நடிக்கும் 'போகி'

தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் மற்றும் இந்தியில் இப்படம் உருவாகிறது.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா. இவர், சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'டிராகன்' படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிகாட்டி இருந்தார்.
தற்போது இவர் 'பரதா' படத்திலும் 'பைசன்' படத்திலும் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் நடிகர் ஷர்வானந்தின் 38-வது படத்திலும் நடித்து வருகிறார்.
இவர்களுடன் தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த 'வீரமே வாகை சூடும்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த டிம்பிள் ஹயாதியும் நடிக்கிறார். ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் கே.கே.ராதா மோகன் தயாரிக்கும் இப்படத்திற்கு பீம்ஸ் செரிரோலியோ இசையமைக்கிறார்.
இந்நிலையில், சம்பத் நந்தி இயக்கும் இப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் மற்றும் இந்தியில் உருவாகும் இப்படத்திற்கு 'போகி' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் துவங்கி இருக்கிறது.






