சர்வானந்த்தின் “பைக்கர்” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்

அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் சர்வானந்த் நடித்துள்ள ‘பைக்கர்’ படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகிறது.
சர்வானந்த்தின் “பைக்கர்” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்
Published on

சர்வானந்த் தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்து உள்ளார். சர்வானந்த் மற்றும் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பைக்கர்’. யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிகர் ராஜசேகர், பிரமாஜி மற்றும் நடிகை மாளவிகா நாயர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்தியாவின் முதல் மோட்டோகிராஸ் திரைப்படமாக ‘பைக்கர்’ உருவாகி இருக்கிறது. சர்வானந்துக்கு ஜோடியாக நடிகை மாளவிகா நாயர் நடித்துள்ளார். ரன் படத்தில் நடித்த பிரபல நடிகர் அத்துல் குல்கர்னி படத்தில் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார்.

‘பைக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியிட்டார். இதில் ‘விக்கி’ என்ற கதாபாத்திரத்தில் ஒரு வெறித்தனமான மற்றும் பைக் ரேஸராக சர்வானந்த் மிரட்டியுள்ளார். செண்டிமெண்டாக தந்தை – மகன் உறவும் இடம்பெற்றுள்ளது. இதில் சர்வானந்துக்குத் தந்தையாகவும், மிகவும் கண்டிப்பான பயிற்சியாளராகவும் ராஜசேகர் நடித்துள்ளார்.

இந்தநிலையில், தணிக்கை வாரியம் ‘பைக்கர்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com