’அகண்டா 2’ உடன் மோதும் ’பைக்கர்’


Sharwanand’s Biker glimpse is thrilling; Film locks horns with Akhanda 2
x

’பைக்கர்’ படத்தில் மாளவிகா நாயர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சென்னை,

நடிகர் ஷர்வானந்த் அடுத்து ஸ்போர்ட்ஸ் ஆக்‌சன் படமான பைக்கரில் நடித்து வருகிறார். அபிலாஷ் ரெட்டி கங்காரா இயக்கியுள்ள இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது.

தலைப்பை போலவே, இந்தப் படம் பந்தயத்தில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு பைக்கரை சுற்றி வருகிறது. மூத்த நடிகர் ராஜசேகர் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் டிசம்பர் 6 ஆம் தேதி திரைகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 வெளியாகி 1 நாள் பின்னர் இப்படம் திரைக்கு வருகிறது.

இதனால் இப்படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம். மாளவிகா நாயர் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தை வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் உப்பளபதி பிரமோத் ஆகியோர் தயாரிக்கின்றனர். ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார்.

1 More update

Next Story