ஒரே 'ஸ்டெப்' போட்டு போட்டு எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது - சம்யுக்தா விஸ்வநாதன்

'கட்சி சேர' பாடலில் நடிகை சம்யுக்தா விஸ்வநாதனின் நடனம் பேசப்பட்டது.
ஒரே 'ஸ்டெப்' போட்டு போட்டு எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது - சம்யுக்தா விஸ்வநாதன்
Published on

சென்னை,

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் 'கட்சி சேர...' என்ற இசை ஆல்பம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்த பாடலில் சாய் அபயங்கருடன் ஆட்டம் போட்ட சம்யுக்தா விஸ்வநாதனின் நடனமும் பேசப்பட்டது.

கடந்த ஆண்டு வெளியான சுழல் - 2 தொடரில் சம்யுக்தா நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து மிஸ்டர் பாரத் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ‘டபுள் ஆக்குபன்சி' என்ற படத்தின் மூலம் சம்யுக்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இதுகுறித்து சம்யுக்தா கூறும்போது, "நடிக்கும் படங்களின் கதை இதுதான் என்று சொல்வது எனக்கு பிடிக்காது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தியேட்டர்களில் தான் தீர்வு கிடைக்க வேண்டும். 'கட்சி சேர...' பாட்டு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இன்றளவும் எங்கு சென்றாலும் அந்த 'ஸ்டெப்' போடுங்க என்று கேட்கிறார்கள். அப்படி கேட்போரிடம் நான் கேட்பது, 'உங்களுக்கே போரடிக்கலையா...?' என்பது தான். வேற பாடல் கூட கேளுங்கள், நான் ஆட தயார். ஒரே ‘ஸ்டெப் போட்டு போட்டு எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது", என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com