நடிகை சாரா அர்ஜுன் குறித்து 'தெய்வத்திருமகள்' பட இயக்குநர் உருக்கம்

தெய்வத்திருமகள் படத்தில் ‘நிலா’வாக நடித்தவர் சாரா அர்ஜுன்.
நடிகை சாரா அர்ஜுன் குறித்து 'தெய்வத்திருமகள்' பட இயக்குநர்  உருக்கம்
Published on

சென்னை,

ஏ. எல். விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் ‘நிலா’வாக நடித்த சாரா அர்ஜுனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. குறிப்பாக படத்தின் இறுதியில் விக்ரம் மற்றும் சாரா இடையே இடம்பெற்ற பாசப்போராட்டக் காட்சி ரசிகர்களின் கண்களை கலங்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் படத்திலும் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், சமீபத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

Also Read
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நடிகை ஷ்ரத்தா கபூர்?
நடிகை சாரா அர்ஜுன் குறித்து 'தெய்வத்திருமகள்' பட இயக்குநர்  உருக்கம்

இந்நிலையில் நடிகை சாரா அர்ஜுன் குறித்து 'தெய்வத்திருமகள்' பட இயக்குநர் ஏ. எல். விஜய் உருக்கமாக பேசி இருக்கிறார். அவர் பேசுகையில்,

“சாரா அர்ஜுன் என்னுடைய மகள் மாதிரிதான். ஒவ்வொரு முறை தேர்வு முடிந்து விடுமுறை விடும்போதும் என் வீட்டிற்கு வருவார். என்னுடைய மகள் இவ்வளவு பெரிய ஸ்டார் ஆனது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர் என்னை ‘மாமா’ என அழைத்தாலும், அவர் எனக்கு மகள்தான்!” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com