''அந்த நடிகைதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்'' - நடிகை ரித்திகா நாயக்


She is my inspiration - Actress Ritika Nayak
x
தினத்தந்தி 12 Sept 2025 2:32 PM IST (Updated: 12 Sept 2025 9:08 PM IST)
t-max-icont-min-icon

நடிகை ரித்திகா தனக்கு பிடித்த ஹீரோயின் குறித்து பகிர்ந்தார்.

சென்னை,

நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான ‘மிராய்’ தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இன்று வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், நடிகை ரித்திகா தனக்கு பிடித்த ஹீரோயின் குறித்து பகிர்ந்தார்.

அவர் கூறுகையில், ''சாய் பல்லவியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த 'பிடா'வை(FIDA) பார்த்த பிறகு எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்'' என்றார்.

1 More update

Next Story