ராம்ப் வாக் செய்து அசத்திய நடிகை ஐஸ்வர்யா ராய் - வியந்து பார்த்த ரசிகர்கள்

நடிகை, ஐஸ்வர்யா ராய். தமிழில் ஜீன்ஸ் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
ராம்ப் வாக் செய்து அசத்திய நடிகை ஐஸ்வர்யா ராய் - வியந்து பார்த்த ரசிகர்கள்
Published on

சென்னை,

உலக அளவில் இந்தியாவின் முகமாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர், ஐஸ்வர்யா ராய். எத்தனை உலக அழகிகள் வந்தாலும், இவர்தான் நிரந்தர உலக அழகியாக மக்களின் மனங்களில் தங்கி விட்டார். 1994ல் மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர், இப்போது இந்தியாவின் அதிக சக்தி வாய்ந்த மனிதர்களுள் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

இந்திய சினிமா உலகில், யாராலும் தொட முடியாத உச்சத்தில் இருந்த நடிகை, ஐஸ்வர்யா ராய். தமிழில் ஜீன்ஸ் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து ரஜினிகாந்த், ஷாருக்கான் என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய்க்கு, 2007ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனுடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் குரு, ராவன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். சில ஆண்டுகள் காதலித்த இவர்கள், பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில், லோரியல் பாரிஸ் பேஷன் வீக்கில், நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தது ரசிர்களை வியக்க வைத்தது. பிரபல வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ராவின் ஆடைகள் அணிந்து ராம்ப் வாக் செய்த அவர், இந்திய கைவினைத் திறனை உலகுக்கு எடுத்துக்காட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com