

சென்னை,
தமிழில், விஜய்யை வைத்து வரிசையாக படங்களை இயக்கிய அட்லீ, இந்திக்கு சென்று ’ஜவான்’ படத்தை இயக்கினார். ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஏஏ22xஏ6(AA22XA6) எனப் பெயரிடப்பட்டுள்ளது
இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் நடிகை தீபிகா படுகோன் பற்றி அட்லீ புகழ்ந்து பேசினார். அவர் கூறுகையில்,
’தீபிகா படுகோன் என் அதிர்ஷ்ட நடிகை. இது தீபிகாவுடன் நான் இணையும் இரண்டாவது படம், அவருடன் பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவம். இந்தத் திரைப்படத்தில் தீபிகா படுகோனின் புதிய பக்கத்தை ரசிகர்கள் காண்பார்கள்’ என்றார்.