

தமிழ் சினிமாவில் 'எமன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத் தொடர்ந்து 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்', 'வெப்', 'சிங்கப்பெண்ணே', 'வா வாத்தியார்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்தவர் தற்போது எதிர்மறை கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படத்திலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "ஒரு நடிகையாக என் கடமையை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதால் வருத்தம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அது மிகவும் பிடித்திருக்கிறது.
சினிமாவில் நடிப்புக்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவள் நான். எனவே சவால்களை விரும்பி ஏற்றுக்கொள்கிறேன். தொடர்ந்து புதுப்புது கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்ப்பேன்" என்று கூறினார்.