

மும்பை
ஆபாசப் படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றிய புகாரில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜ்குந்த்ரா பற்றி இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு புகார் கூறியிருந்தார். அவருடன் பணியாற்றியது தனக்கு மோசமான அனுபவம் என்று கூறிய அவர், ராஜ்குந்த்ரா மீது பாலியல் புகாரும் கூறியிருந்தார்
ஷெர்லின் சோப்ரா 2021 ஏப்ரல் மாதம் ஜுஹு காவல் நிலையத்தில் ராஜ்குந்த்ரா மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்து இருந்தார். இதை தொடர்ந்து ராஜ்குந்த்ரா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஏப்ரல் 19 அன்று, ராஜ் குந்த்ரா சோப்ரா வீட்டிற்கு வலுக்கட்டாயமாக நுழைந்து வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டியதாக சோப்ரா கூறி ஏப்ரல் 20, 2021 அன்று ராஜ் குந்த்ராவுக்கு எதிரான தனது வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் ஷெர்லின் சோப்ரா அக்டோபர் 14 அன்று ஜுஹு போலீஸ் நிலையத்தில் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது மீண்டும் புகார் அளித்து உள்ளார்.
பாலியல் வன்கொடுமை, மோசடி மற்றும் மிரட்டல் குறித்து போலீசாரிடம் ஷெர்லின் சோப்ரா புகார் மனு அளித்து உள்ளார்.
இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் நடிகர் ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக ரூ. 50 கோடி கேட்டு மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் வழக்கறிஞர்கள் ரூ .50 கோடி கேட்டு ஷெர்லின் சோப்ரா வுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
ஷெர்லின் சோப்ரா, ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது சுமத்திய குற்றச்சாட்டுகள், எந்த ஆதாரமும் இல்லாதது. பணம் பறிப்பதற்கான ஒரு மறைமுக நோக்கத்துடன். ஷெர்லின் சோப்ராவால், உருவாக்கப்பட்டவை என அவர்கள் கூறி உள்ளனர்.