

மும்பை
ஆபாச பட மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அவரது கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட பிறகு, ஷில்பா ஷெட்டி இன்று (ஆகஸ்ட் 2) தனது முதல் அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.
ஷில்பா ஷெட்டி தன்னைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் மீது குற்றம் சாட்டி மும்பை ஐகோர்ட்டில் ரூ.25 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஷில்பா ஷெட்டி இன்ஸ்டாகிராமில் தனது நிலைப்பாட்டை விளக்கி அனைத்து வதந்திகளையும் குற்றச்சாட்டுகளையும் மறுத்து ஒரு அறிக்கையைப் வெளியிட்டு உள்ளார். இந்த பிரச்சினையில் அவர் யாரையும் குற்றம் சொல்லவில்லை என்றும் இது பிரச்சினைக்கு உட்பட்டது என்பதால் தொடர்ந்து பேசுவதைத் தவிர்ப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
ஆபாச வீடியோ வழக்கில் ஒருபோதும் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்ற தத்துவத்தை பின்பற்றுவதாக கூறி உள்ளார்.
ஆமாம்! கடந்த சில நாட்களாக, எல்லா விவகாரங்களும் சவாலாக இருந்தது. நிறைய வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுகள் எங்கள் மீது உள்ளன. ஊடகங்கள் மற்றும் நலம் விரும்பிகளால் என் மீது நிறைய தேவையற்ற கவனம் செலுத்த பட்டது . எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்துக்கும் நிறைய கேள்விகள் எழுந்தன. இந்த வழக்கில் கருத்து கூறுவதை தவிர்க்கிறேன், எனவே தயவுசெய்து என் சார்பாக தவறான மேற்கோள்களைக் கூறுவதை நிறுத்துங்கள்.
நடந்து கொண்டிருக்கும் விசாரணை மும்பை போலீஸ் மற்றும் இந்திய நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.ஒரு குடும்பமாக, நாங்கள் அனைத்து சட்ட தீர்வுகளையும் தேடுவோம் . ஆனால், அதுவரை எனது குழந்தைகளுக்காக எங்கள் தனியுரிமையை மதிக்கும்படி, குறிப்பாக ஒரு தாயாக - நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.மேலும் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் அரைகுறையாகத் தகவல் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
"நான் கடந்த 29 ஆண்டுகளாக ஒரு சட்டபூர்வமான இந்திய குடிமகனாகவும் கடின உழைப்பாளியாகவும் இருக்கிறேன். தயவுசெய்து சட்டம் அதன் போக்கில் செல்லட்டும் . சத்யமேவ் ஜெயதே! நன்றியுடன், ஷில்பா ஷெட்டி குந்த்ரா என அதில் கூறி உள்ளார்.