தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய நடிகை....நேரில் மன்னிப்பு கேட்ட நடிகர் ஷைன் டாம் சாக்கோ


Shine Tom Chacko apologises to Vincy Aloshious publicly for misconduct
x

ஷைன் டாம் சாக்கோ உடன் வின்சி அலாசியஸ் நடித்த ‘சூத்ரவாக்கியம்’ படம் வரும் 11-ம் தேதி அன்று தியேட்டர்களில் வெளியாகிறது.

திருச்சூர்,

படப்பிடிப்பின்போது தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை வின்சி அலோஷியஸின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் ஷைன் டாம் சாக்கோ .

''சூத்திரவாக்கியம்'' படப்பிடிப்புத்தளத்தில் நடிகர் ஒருவர் போதைப்பொருளை உட்கொண்டு, தன்னிடமும் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று நடிகை வின்சி அலாசியஸ் முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பானது.

இந்நிலையில், ஷைன் டாம் சாக்கோ உடன் வின்சி அலாசியஸ் நடித்த 'சூத்திரவாக்கியம்' படம் வரும் 11-ம் தேதி அன்று தியேட்டர்களில் வெளியாகிறது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நேற்று திருச்சூரில் நடைபெற்றது. அதில், ஷைன் டாம் சாக்கோ, தீபக் பரம்போல், யூஜின் ஜோஸ், வின்சி அலாசியஸ் ஆகியோர் பங்கேற்றார்.

அப்போது, அனைவரது முன்னியிலையிலும் வின்சியிடம் ஷைன் டாம் சாக்கோ மன்னிப்பு கேட்டார். 'பொழுதுபோக்கு' என்ற பெயரில்தான் அடிக்கடி இப்படி 'அதீதமாக' நடந்து கொண்டதற்காக வருத்தம் தெரிவித்தார்.

1 More update

Next Story