சிவா நடித்துள்ள 'காசேதான் கடவுளடா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சிவா நடித்துள்ள 'காசேதான் கடவுளடா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவா நடித்துள்ள 'காசேதான் கடவுளடா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் சித்ராலயா கோபு இயக்கத்தில் கடந்த 1972-ம் ஆண்டு முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. தற்போது இந்த படத்தை மீண்டும் ரீமேக் செய்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஊர்வசி, கருணாகரன், யோகிபாபு, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 'காசேதான் கடவுளடா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com