ஷாருக்கான் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ஷாக்... பலரின் மொபைல் போன்கள் திருட்டு

நடிகர் ஷாருக்கானின் பிறந்த நாளின்போது அவருடைய ரசிகர்களில் 30 பேர் மும்பை காவல் நிலையத்திற்கு சென்றனர்.
ஷாருக்கான் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ஷாக்... பலரின் மொபைல் போன்கள் திருட்டு
Published on

மும்பை,

நடிகர் ஷாருக்கான் கடந்த 2-ந்தேதி தன்னுடைய 58-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு திரைபிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி அவருடைய பிறந்த நாள் கொண்டாடப்படும்போது, மும்பையில் உள்ள அவருடைய மன்னத் இல்லத்தின் முன் திரளான ரசிகர்கள் கூடுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டும் ரசிகர்கள் வழக்கம்போல் அதிக அளவில் கூடியிருந்தனர். அவர் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகம் வழியே நன்றியை தெரிவித்து கொண்டார். ஆனால், ரசிகர்களில் 30 பேர் மும்பை காவல் நிலையத்திற்கு சென்றனர். அதில், அவர்களுடைய மொபைல் போன்கள் திருடு போயுள்ளன என புகாராக தெரிவித்தனர்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சுபம் ஜாம்னா பிரசாத், முகமது அலி மற்றும் இம்ரான் என அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் உருவான 'பதான்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி வெளியானது. ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக வசூல் ஈட்டி சாதனை படைத்தது. தொடர்ந்து, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி 'ஜவான்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் உலக அளவில் ரூ.1,004.92 கோடி வசூல் செய்துள்ளது என்று படக்குழு அறிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com