'ஜனநாயகன்' இணையத்தில் வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது - ரஜினிகாந்த் பதிவு

'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் வெளியானதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தவெக தலைவரும், நடிகருமான விஜய் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் நேற்று மாலை இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் வெளியானதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், "ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது " என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com