உடல் எடையைக் குறைத்த நடிகை நிவேதா தாமஸ்

தெலுங்கானா மாநில அரசு விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை நிவேதா தாமஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.
உடல் எடையைக் குறைத்த நடிகை நிவேதா தாமஸ்
Published on

நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.நடிகர் கமலுடன்பாபநாசம், விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்..இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான 35 சின்ன கதகாடு என்கிற தெலுங்கு படத்தில் உடல் எடையை அதிகரித்து நடித்தார். எடை கூடியதில் நிவேதா தாமஸ் ஆளே மாறினார். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், இதுபோன்ற உருவக்கேலிகளும், எதிர்மறை விமர்சனங்களும் என்னை நிச்சயம் பாதிக்காது, என்று சொல்லும் நிவேதா தாமஸ், தொடர்ந்து தனது பணிகளில் முனைப்பாக ஈடுபட்டிருக்கிறார்.

சமீபத்தில் அவர் தெலுங்கானா மாநில அரசு விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது உடல் எடை குறைந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ளனர். முழுமையாக குறைக்க முடியவில்லை என்றாலும் அதற்கான முயற்சியில் இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அளித்து வருகின்றனர். .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com