சாய் பல்லவிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி: 'ராமாயணா' படக்குழு எடுத்த முக்கிய முடிவு?

ரன்பீர் கபூர் ராமராக நடிக்கும் இந்தப் படத்தில், சீதை வேடத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
சாய் பல்லவிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி: 'ராமாயணா' படக்குழு எடுத்த முக்கிய முடிவு?
Published on

தமிழ் நடிகையான சாய் பல்லவியின் பாலிவுட் அறிமுகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்த சாய் பல்லவி, தற்போது ஹிந்தி சினிமாவில் முதல் முறையாக சந்தித்த தோல்வியால் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஏக் தின் படத்தில் ஜூனைத் உடன் நடித்திருந்த சாய் பல்லவி, கடந்த மே 1ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். சுமார் ரூ.15 கோடி செலவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இப்படம், வெளியான இரண்டு வாரங்களில் ரூ.5 கோடி மட்டுமே வசூலித்து பெரிய தோல்வியை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், சாய் பல்லவிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக, ராமயாணா படத்தில் அவருக்கான டப்பிங்கில் வேறு குரலை பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் சாய் பல்லவியின் இந்தி உச்சரிப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், இதுகுறித்து படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்பீர் கபூர் ராமராக நடிக்கும் இந்தப் படத்தில், சீதை வேடத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. சுமார் ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக செலவில் தயாராகும் படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com