படப்பிடிப்பு தொடங்கியது : மீண்டும் புதிய படத்தில் ஜோதிகா

நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு சில வருடங்கள் ஒதுங்கி இருந்த ஜோதிகா ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
படப்பிடிப்பு தொடங்கியது : மீண்டும் புதிய படத்தில் ஜோதிகா
Published on

36 வயதினிலே படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு மகளிர் மட்டும், பாலா இயக்கிய நாச்சியார், மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களிலும் நடித்தார்.

ராதாமோகன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காற்றின் மொழி படம் இப்போது திரைக்கு வருகிறது. அடுத்து மீண்டும் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் எஸ்.ராஜ் டைரக்டு செய்கிறார். பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com