படப்பிடிப்பு விரைவில் முடிகிறது பொன்னியின் செல்வன் படத்தில் 12 பாடல்கள்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
படப்பிடிப்பு விரைவில் முடிகிறது பொன்னியின் செல்வன் படத்தில் 12 பாடல்கள்
Published on

அரங்குகள் அமைக்காமல் மலை மற்றும் வனப்பகுதிகளில் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இதுவரை 80 சதவீதத்துக்கு மேல் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராகிறது. முதல் பாகத்தை அடுத்த வருடம் கோடையில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம்ரவி, சுந்தர சோழராக பிரகாஷ்ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், அனிருத்த பிரம்மராயராக பிரபு, ஆழ்வார்க்கடியானாக ஜெயராம், கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, குடந்தை ஜோதிடராக மோகன்ராம், சோமன் சாம்பவனாக ரியாஸ்கான் நடிப்பதாக கதாபாத்திரங்களின் பெயர்கள் இணையதளத்தில் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பொன்னியின் செல்வன் படத்தில் முதல் பாகத்தில் 6 பாடல்களும், 2-ம் பாகத்தில் 6 பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com