

மும்பை
நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடந்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் (வயது 36). நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகனான இவர், 'பாகி', 'பாகி-2'. 'வார்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மராட்டியத்தின் மும்பை நகரில் ஜுகு பகுதியில் புஷ்பா பார்க் என்ற இடத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் விளையாடி விட்டு கருப்பு நிற பி.எம்.டபிள்யூ. காரில் வீட்டுக்கு புறப்பட்டார். நடிகரை காண அவரது ரசிகர்கள் மைதானம் அருகில் குவிந்தனர். கார் மெதுவாக நகர்ந்து சென்றபோது, கூட்டத்தில் இருந்த சிலர் திடீரென்று கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில், நடிகர் டைகர் ஷெராப்புக்கு கை, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. கார் டிரைவருக்கும் காயம் ஏற்பட்டது என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், ரசிகர்களுடன் கூட்டத்தில் மறைந்திருந்த சிலர் திடீரென காரை நெருங்கி துப்பாக்கி சூடு நடத்திய காட்சிகள் உள்ளன. மொத்தம் 7 முறை சுடப்பட்டு உள்ளன. இதில், ஒருவருடைய துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறவில்லை என தெரிகிறது. இதனால், அவர்கள் அனைவரும் தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், சந்தேகத்தின் பேரில் சிறுவன் உட்பட 3 பேரை ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.